|
||||||||||
மார்க்ஸியச் சிந்தனை மையத்தின் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய நூல்களின் வழிநின்று, மார்க்ஸியத் தத்துவத்தை ஐயம் திரிபறப் புரிந்து கொள்வது, மனித சமூகத்தின் வரலாற்றையும், நடப்புகால அரசியல், பொருளாதார நிகழ்வுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முயல்வது. மேற்கண்ட நோக்கங்களுக்காக மார்க்ஸியத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட தோழர்கள் ஒன்று கூடி விவாதிப்பது, கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நூல்களைப் படித்து வகுப்பெடுப்பது, அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தமிழாக்கம் செய்து நூலாகவும், வலையகத்திலும் வெளியிடுவது. […..] சோஷலிசம் என்பது ஏதோவோர் அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற முழுநிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை. இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும். [.....] |
|
|||||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்
|