மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

சோசலிஷம் பற்றி அறிந்து கொள்வதில்
மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது

முதலாளித்துவத்துக்கு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி காரணமாக, சோசலிஷக் கருத்துகளை அறிந்து கொள்வதில் உலகெங்கிலும் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. மெரியம்-வெப்ஸ்டர் நிறுவனம் தனது ஆன்லைன் அகராதி வலையகத்தில் 2008-ஆம் ஆண்டில் தேடப்பட்ட சொற்களில் “சோசலிஷம்” என்ற சொல் மூன்றாவது இடம் வகிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குச் சராசரியாக 12 கோடியே 50 லட்சம் பேர் சோசலிஷம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலையகத்தை நாடியுள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் திவாலாகத் தொடங்கிய பிறகு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் விற்பனை 700% அதிகரித்துள்ளதாக அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது. (இங்கிலாந்து “டைம்ஸ்” பத்திரிக்கை, 09-11-2008).

பெர்லினில் கார்ல் மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” நூலின் அனைத்து பிரதிகளும் பல மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன. மார்க்ஸ் எழுதிய நூல்களின் முழுமையான தொகுப்புகளை வெளியிட்டு வரும் ஜெர்மன் பதிப்பாளர் ஜோர்ன் ஷட்ரம் கூறுவதாவது: ”2004-ஆம் ஆண்டுவரை மூலதனம் நூல் ஆண்டுக்கு 100 பிரதிகளுக்கும் குறைவாகவே விற்று வந்தது. 2008-ஆம் ஆண்டில் கடந்த 10 மாதத்தில் 2500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுள்ளது. முதலாளித்துவம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றி மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதையே இது காட்டுகிறது.” (இன்டர் பிரஸ் சர்வீஸ், 07-11-2008).

ஜப்பானில் கனிகோஷன் என்னும் கம்யூனிஸ நாவல் 2008-இல் 5 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. முந்தைய ஆண்டில் இதன் விற்பனை 5000 பிரதிகள் ஆகும். 1929-ஆம் ஆண்டில் ஒரு கப்பலில் இருந்த கொடுமையான பணி நிலைமைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றிய நாவல் இது. (இங்கிலாந்து ”டெலிகிராஃப்” பத்திரிகை, 18-11-2008).

*****
இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்